இலங்கையின் வரலாற்றுக் காலம் விஜயன் (ஆரியர்) வருகை முதலே ஆரம்பமாகின்றது. இந்த ஆரியர் வருகை காலத்திற்கு காலம் நடைபெற்றது இதில் முதலாவதாக நடைபெற்றது விஜயன் என்பவனுடன் வருகை தந்த 700 பேருடையது. அதாவது இலங்கையில் காணப்படும் இலக்கிய மூலாதாரங்களின் உதவியுடன் ஒரு தொடர்ச்சியான வரலாற்றை அறிய முடிகின்றது அதனலே இலங்கையின் வரலாற்றுக் காலம் விஜயன் முதல் ஆரம்பமாகின்றது என்போம்.
விஜயன்(சிங்ஹலன்) வருகை ஆரியர் வருகை என அழைக்கப்படுகின்றது மேலும் பல கதைகள் விஜயன் வருகை பற்றி காணப்பட்ட போதிலும் அவற்றின் அடிப்படை உண்மைகளை ஆராய்ந்து அறிவது அவசியமாகும்.
இலங்கையில் வாழ்ந்த இராக்கத பெண் இலங்கை வணிக நோக்கத்தில் வந்த 500க்கும் மேற்பட்ட ஆரியர்களை வஞ்சித்து இலங்கையில் வைத்து கொண்டதால் அவர்களை மீட்க விஜயன் வந்து இராக்கதர்களை வென்று தோழர்களை மீட்டதோடு இலங்கையில் ஓர் அரசையும் நிறுவியதாகவும் கூறப்படுகின்றது,
வணிக நோக்கத்தில் வந்த ஆரியர்கள் இலங்கையின் வளம் கண்டு இலங்கையினைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகின்றது.

விஜயனின் சொந்த நாடு.
விஜயன் இந்தியாவின் லாட நாட்டிலிருந்து இலங்கை வந்தான் என கூறப்படுகின்றது. இந் நாடு இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. லாட நாட்டின் தலைநகராக விளங்கியது சிங்கபுரமாகும்.
இந்திய மரபு
இந்திய வரலாறுகளின் விஜயனும் அவனுடைய தோழர்களான 700 போர் கொண்ட குழுவினைரையும் அவனுடைய தந்தை விஜயனின் துர் நடத்தை காரணமாக நாடுகடத்தியதாக கூறப்படுகின்றது.
இலங்கை மரபு
இலங்கை வரலாற்று மூலாதாரமான மகாவம்சத்தின் படி விஜயன் இந்தியாவிலிருந்து “இலங்கைத்தீவில் ஓர் இராச்சியத்தை நிறுவுவேன் என சபதமெடுத்து இந்தியாவிலிருந்து புறப்பட்டன்” என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தான் என பல மூலாதாரங்களிலிருந்து உறுதிசெயப்படுகின்றது.
இலங்கையில் விஜயனும் அவனுடைய தோழர்களும்
விஜயன் தன்னுடைய 700 தோழர்களுடனே இலங்கை வந்தான் என மகாவம்சம் எனும் இலங்கையின் வரலாற்று மூலாதாரமும் இந்தியாவின் சில மூலாதாரங்களும் உறுதிசெய்கின்றன.
இந்த 700 போர் விஜனுடைய தோழர்களாக இருந்தபோதும் இது விஜயனுடைய நம்பிக்கைக்குரிய படையாகவும் இருந்திருக்கலாம் என கருத இடமுண்டு.
இலங்கை வருகை
வட இந்தியாவில் லாட நாடு மேற்கிலா? அல்லது கிழக்கிலா? என்பது பற்றி பல கருத்துக்கள் காணப்படுகின்றது.
இடங்களின் பண்டைய கால பெயர்களின் ஒற்றுமை மேற்கு மற்றும் கிழக்கில் பொருந்தும் வகையிலே காணப்படுகின்றது.
பண்டைய கால மொழி ஒற்றுமையினை ஆராய்ந்தவர்களிடமும் தீர்க்கமான முடிவில்லை என்பது தெளிவு.
பேராசிரியர் பரனவிதான அவர்ளுடைய ஆய்வின் படி இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து கடல் வழியாக ஆரியர்கள் வந்தார்கள் என்பதை உறுதி செய்கிறார்.
ஆரியர் இலங்கை வந்து பல இடங்களில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.
தம்பபண்ணியில் வியஜன் வந்திறங்கினான் என கூறப்படுகின்றது.
விஜயன் தம்பண்ணியினைக் தனது தலைமைபீடமாக இலங்கையினை ஆட்சி செய்தான் என கூறப்படுகின்றது.
மேலும் அவனுடைய அமைச்சர்கள் உபதிஸ்ஸகம, அனுராத கம, உஜ்ஜேனீ, உறுவெலா, விஜிதபுரம் பேன்ற குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இக் குடியேற்றங்கள் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து இராச்சியங்களாக தோற்றம் பெற்றது.
விஜயன் இலங்கை வருகை
விஜயனின் இலங்கை வருகை பற்றி இருவகையான மரபுகள் காணப்படுகின்றன.இந்திய மரபு