உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்

பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள்

கோல்புறூக் கரமன் யாப்பு                 1833

குறூமக்கலம் யாப்பு                    -           1910

மனிங் யாப்பு                                 -           1920

மனிங் டெவன்சயர் யாப்பு        -           1920

டெனமூர் யாப்பு                            -           1931

சோல்பரி யாப்பு                           -           1947

  

கோல்புறூக் கரமன் யாப்பு            1833

Colebrooke–Cameron Commission

ஆளுனர் சேர் ரொபர்ட் ஹேட்டன்


காரணம்:

1.     இலங்கையின் நிர்வாகத்திற்கு வருமானத்தினை விட அதிக செலவு ஏற்பட அதற்கு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது.

a.     அரசியல், மற்றும் பொருளியல் நிலையினை ஆய்வு செய்ய 1829ம் ஆண்டு டபிள்யூ. எச்.ஜீ கோல்புறூக் என்பவரும்

2.     நிதி மற்றும் சட்ட நடவெடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்ய.

a.     1830ம் ஆண்டு சார்ள்ஸ். எச் கமரன் என்பவரையும் குடியேற்ற நாடுகளின் செயலாளரால் அனுப்பப்பட்டனர்.

இவர்களுடைய ஆறிக்கை மற்றும் ஆலோசனைப்படி புதிய அரசியல் சீர்திருத்தம் ஒன்று எழுத்தப்ப்ட்டது இதுவே கோல்புறூக் கமரன் யாப்பு எனப்பட்டது.

கண்டி மற்றும் கரையோரங்கள் ஒன்றினைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இலங்கயினை ஒரு நாடாக பிரகடனப்படுத்தி அதனை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

இது 1848 கலவரத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.

நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

வட மாகாணம்

தென் மாகாணம்

மேல் மாகாணம்

கிழக்கு மாகாணம்

மத்திய மாகணம்

 கட்டாய இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டது. 

அரசின் வர்த்தக ஏகபோக உரிமை அகற்றப்பட்டது.

மத்திய தர வர்க்கம் தோற்றம்.

 ஜோர்ஜ் வோல் என்பவர் இலங்கை சங்கத்தினை தோற்றுவித்தார்.

இலங்கயின் மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றமும் அவர்களின் கோரிக்கைகளும் புதிய யாப்பினை இலங்கையில் அமைக்க வழிவகுத்தது.

  1910 குறூ மக்கலம் யாப்பு.

இலங்கயில் இரண்டாவதாக அறிமுகப்படுத்திய யாப்பாகும்.

80 வருடங்களின் பின்னர் ஓர் அரசியல் யாப்பு மீண்டும் அமைக்கப்பட்டது. (இக் காலத்தில் சமூக பொருளாதார மாற்றங்கள் பல ஏற்பட்டன)

1908ம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஜேம்ஸ் பீரிஸ் என்பவர் புதிய அரசியல் சீர்த்திரத்ததின் தேவை பற்றிய அறிக்கை ஒன்றை குடியேற்ற நாடுகள் செயளாலரிடம் கையழித்தார்.

தொடர்ந்து பல இயக்கங்கள் இக் கோரிக்கையினை முன்வைத்தன.

1910 நவம்பர் மாதம் குடியேற்ற நாடுகளுன் செயலாளர் நாயகமான குறூ பிரபு மற்றும் இலங்கையின் ஆளுனர் மக்கலம் அவர்களும் புதிய யாப்பினை (குறூ-மக்கலம் யாப்பு 1912) அறிமுகப்படுத்தினார்கள்.

 யாப்பின் அம்சங்கள்

சட்டவாக்க கழகத்திற்கு முதன் முறையாக வாக்குரிமை மூலம் அங்கத்துவர்களை தெரிவு செய்தனர்.

இலங்கையருக்கான கல்வி கற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்

வக்குரிமை வரையறுக்கப்பட்டிருத்தல்.

            தகமை, சொத்து என்பன வாக்குரிமையில் செல்வாக்கு செலுத்தியது.

 ஆளுனரின் அதிகாரமே இவ் யாப்பின் பின்னரும் சட்ட சபையில் ஓங்கியிருந்தது.

 

மது ஒழிப்பு இயக்கம் 1912 - 1915

குறூ – மக்கலம் யாப்பு இலங்கையரின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இதனால் மத்திய தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர்.

1912 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மதுபானசாலைகள் அமைக்க அனுமதியளிக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்க்கும் இயக்கமாக இந்த மது ஒழிப்பு இயக்கம் தோற்றம் பெற்றது.


இந்திய தேசிய இயக்கத்தின் தாக்கம்

19ஆம் நூற்றாண்டில் இலங்கையினை போல் இந்தியாவிலும் பிரித்தானியர் ஆதிக்கத்தினை பெற்றிருந்தனர்.

1885ஆம் ஆண்டு இந்தியாவில் பல தலைவர்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்தனர் இதனால் 1918ஆம் ஆண்டில் சிறந்த அரசியல் சீர்திருத்தம் ஒன்றை ஆங்கிலேயர் வழங்கியிருந்தனர்.

சுரேந்திரநாத் பானாஜீ

பால கங்காதர திலகர்

மகாத்மா காந்தி

ஜவகர்லால் நேரு

ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள்

குடியேற்ற நாடுகளின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்துதல்

பிரித்தானியாவுக்கு முறைப்பாட்டு மனுக்களை முன்வைத்தல் போன்ற நடவெடிக்கைகளில் மாத்திரமே தமது அரசியல் சீர்த்திருத்தங்களை வேண்டி நின்றனர்.

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு  போன்றோர் இலங்கை வந்து மக்களுக்கு உரையாற்றி சில நாட்கள் தங்கியிருந்து சென்றனர்.

இதன் பின்னர் (1915) இலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை ஒழுங்கமைத்த இயக்கங்கள் மூலம் முன்னெடுத்தனர்.

இதன் தோற்றமே இலங்கை தேசிய சங்கமாகும்.

 

இலங்கை தேசிய இயக்கம்

1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லீம் கலவரத்தினை இராணுவ சட்டம் மூலம் கட்டுப்படுத்தியது பிரித்தானிய அரசு.

 இதன் பின்னர் நிர்வாக நடவெடிக்கைகளில் அதிக அதிகாரம் இலங்கையருக்கு இருக்க வேண்டும் என உணர்ந்தனர்.

 அதன் முயற்சியாக 1919ஆம் ஆண்டு அரசியல் போரட்டங்களை முன்னெடுக்க சக்திவாய்ந்த ஓர் குரலாக இருக்க, இலங்கையில் காணப்பட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பே இலங்கயின் தேசிய சங்கமாகும்.

 1915ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் முன்னனி அரசியல் போராட்ட தலைவராக இருந்த சேர். பொன் இராமனாதன் அவர்கள் இவ் இயக்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டர்.

 

  
மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம்  1920

 குறூ மக்கலம் அரசியல் யாப்பு சீர்திருத்ததில்திருப்தியடையாத இலங்கையர்களால் பல போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதம் விளைவாக 1920 ஆம் ஆண்டு ஆளுனர் மனிங் என்பவரால் ஓர் யாப்பு மேற்கொள்ளப்பட்டது.

முதல் முறையாக சட்டவாக்க கழகத்தில் உத்தியோக சார்பற்றோர் பெரும்பாண்மை

பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை

வரயறுக்கப்பட்ட வாக்குரிமை

இனவாரிப் பிரதிநிதித்துவ முறையும் காணப்பட்டது.

ஆளுனர் அதிகாரமே மேலோங்கி காணப்பட்டது.


1924 மனிங் டெவன்ஷயர் அரசியல் சீர்திருத்தம்.

 இச் சீர்திருத்தம் மூலம் சட்டவாக்க சபையில் உத்தியோக சார்பற்றவர் தொகை அதிகரித்தது மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

ஆட்சி நடாத்தும் அதிகாரம் ஆளுனரிடம் இருக்க

பெறுப்பு மக்கள் பிரதிநிதிகளான சட்டசபையிடம் இருந்தது (சட்ட சபையில் அதிக செல்வாக்கினை மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருந்தர்கள்)

இதனை அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சி முறை என அழைத்தனர்.


டொனமூர் அரசியல் சீர்திருத்தம் 1931

டொனமூர் பிரபுவின் தலைமையில் ஆணைக்குழு 1927ஆம் ஆண்டு இலங்கை வந்து மக்கள் கருத்துக்களை பெற்று சீர்திருத்தமொன்றை அறிமுகப்படுத்தியது.

இலங்கை ஆளுனரான கியூ கிளிபார்ட் அவர்கள் இலங்கையில் ஆட்சி நடாத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் எடுத்துக் கூறிய பின்னர்.

1927 ஆம் ஆண்டு டொனமூர் பிரபுவின் தலைமயில் ஓர் ஆணைக்குழு இலங்கையின் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்டது.

டொனமூர் குழுவினரின் வருகை

இவர்கள் இலங்கை மக்களிடையே காணப்பட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து கொடுத்து அறிக்கை மற்றும் ஆலோசனையின் அடிப்படையின் 1931 ஆம் ஆண்டு டொனமூர் எனும் அரசியல் அமைப்பு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

டொனமூர் விதந்துரைப்புகளில் முக்கிய விடயங்கள்

21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கியமை

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இலங்கை அரச சபையை அமைத்தமை

சுதேச மக்களுக்கு நிர்வாகத்தில் ஈடுபட நிர்வாகக் குழு முறையை ஏற்படுத்தியமை

உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கியமை


இலங்கை வரலாற்றில் மிக முக்கிய இடத்தினை பெற்ற இவ் யாப்பின் முக்கிய அம்சங்களை நோக்குவோம்.

இவ் யாப்பின் படி சட்டவாக்க கழகம் அரசுக்கழகமாகியதுடன் அங்கத்தவர்கள் தொகை 61 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன் பிரதிநிதிகள் பினவரும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமை இவ் யாப்பினுடைய முக்கிய அம்சமாகும்.

இதற்கு தலைமை வகிப்பவர் அரச கழகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் ஒருவராவர்.

டொனமூர் அரசாங்கசபையின் கட்டமைப்பு

மொத்த உறுப்பிர்கள் 61

சர்வசன வாக்குரிமை மூலம் 50 உறுப்பினர்

இனரீதியான நியமனம் 8 உறுப்பினர்கள்

உத்தியோக சார்புள்ளோர் 3 பேர்

பிரதம செயலாளர்.

நிதிச் செயலாளர்

சட்டத்துறை நாயகம்

அரசாங்க சபை சட்டங்களை ஆக்கும் அதிகாரம் பெற்றிருந்தது.

இச்சட்டங்களை அமுல்படுத்த தேசாதிபதியின் அங்கீகாரம் அவசியம்.

நிர்வாகக் குழு முறை

இலங்கையில் மந்திரிசபை முறையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சூழ்நிலையோ, அரசியல் கட்சிகளோ காணப்படவில்லை.

இருப்பினும் உள்நாட்டு மக்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகப் பொறுப்புக்களை வழங்கவே இது ஏற்படுத்தப்பட்டது

அரசாங்க சபையில் மொத்த உறுப்பினர்கள் 61 பேரில் 3 அரசாங்க உத்தியோகத்தர்களையும், சபாநாயகரையும் தவிர ஏனைய 57 உறுப்பினர்களும் (குறைந்தது 7 கூடியது 9 எனும் அடிப்படையில்) 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்டு 7 இலாகாக்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

உள்நாட்டலுவல்கள் -d.p ஜயதிலக்க

விவசாயமும் காணியும் -d.s சேனா நாயக்க

உள்ளுராட்சி-C.பட்டுவன் துடாவ

சுகாதாரம்- p.பான பொக்கை

கல்வி-c.w.w கன்னங்கர

போக்குவரத்தும் பொது வேலைகளும்-N.m.மாக்கான் மார்கர்

தொழில் கைத்தொழில் வர்த்தகம்.-p.சுந்தரம்

இம்முறையே நிர்வாகக்குழு முறை என அழைக்கப்படுகின்றது.


சுதந்திரமான கல்வி முறை

விவசாய குடியேற்ற திட்டங்கள் போன்ற பொதுமக்கள் சார்ந்த சேவைகள் செயற்படுத்தப்பட்டன.

ஆளுனரும் அரச திகாரிகளும்.

ஆளுனரின் அதிகாரம் பெருமளவில் குறைக்கப்பட்டமை இந்த அரசியல் யாப்பின் மற்றுமோர் சிறப்பம்சமாகும்.

ஆளுனர் அமைச்சர்களுடனும் அரசு கழகத்துடனும் ஒத்துழைத்து செயற்பட வேண்டியேற்பட்டது.

இவ் யாப்பின் குறையாக கருதப்படுவது.

நிதி, சட்ட நடவெடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவெடிக்கைகள் என்பன அரச அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தமையாகும். 

இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் பற்றி எமது அடுத்த பதிவில் காண்போம்