பிரித்தானியரின் கீழ் இலங்கையில் பொருளாதார சமூக மாற்றங்கள்
அறிமுகம்.
பொருளாதார மாற்றம்
பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி
கோப்பி
சிங்கோனா
மற்றும் கொக்கோ
தேயிலை
தெங்கு
இறப்பர்
சமூக மாற்றம்
மத்திய தர
வகுப்பினர் தோற்றம் பெற்றது.
தொழிளாலர் வகுப்பு தோற்றம்
கலாச்சார மாற்றம்
அறிமுகம்.
பிரித்தானியர்
இலங்கையினை கைப்பற்றி ஆட்சி செய்ய தொடங்கியது முதல் சுதந்திரம் அடையும் வரையான
காலப்பகுதிக்குள் அரசியல்,
சமூக, பொருளாதார
முறைகள் மாறியதோடு கலாச்சார பண்புகளும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
பொருளாதார மாற்றம்
ஐரோப்பியர்கள் அதிகமாக வர்த்தக பயிர்களில் ஈடுபட்டமையால் விவசாயம் முக்கியத்துவத்தினை இழக்க தொடங்கியது.
இதில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில்
வர்த்தக பயிர்களுடன் சிறு கைத்தொழில்களும் வளர்ச்சியடந்தது இதனால் கூலிக்கு வேலை
செய்யும் தொழிலாளர் வர்க்கம் ஆரம்பமாகியது.
மேலும் இவர்கள் காலத்தில் கண்டி சுதந்திர இராச்சியமாக
இருந்தமையால் இலங்கையில் மரபு வழிப் சமூக பொருளாதார முறைகளில் பாரிய மாற்றங்கள்
ஏற்படவில்லை.
சுயதேவை கிராமிய பொருளாதார முறையில் வாழ்ந்தனர் என கூறப்படுகின்றது.
இம் மக்கள் பரஸ்பரம்,
உதவி புரியும் பண்பு மற்றும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர்.
இக்காலத்தில் அத்தம் முறை (உழைப்புக்கு உழைப்பு)
காணப்பட்டது.
எனவே பணப்புழக்கம் மிக அரிதாகவே காணப்பட்டது.
அரச நிலங்களை அனுபவிப்பது: அரசனுக்கு சேவை செய்பவர்களுக்கு அரசன் நிலங்களை மானியமாக வழங்கியிருந்தான்.
இது பரவேணி எனப்பட்டது.
இராஜகாரிய முறை: நாட்டில் வயது வந்த ஆண்கள் அனைவரும் ஆண்டில் குறித்த சில நாட்கள் மன்னனுக்காக வேலை செய்ய வேண்டியிருந்தது இது இராஜகாரிய முறை எனப்பட்டது.
கோல்புறூக் ஆணைக்குழுவின் பொருளாதார சீர்திருத்தங்கள்
வருமானத்தை விட நிருவாக செலவு அதிகரித்தமையினாலே கோல்புறூக் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது.
இதனால் கோல்புறூக் குறைந்த வருமானத்தில் இலங்கையினை
நிருவாகிக்க ஒரு திட்டத்தை வகுத்தது போல் இலங்கையின் வருமானத்தை அதிகரிக்க பல
பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
இலங்கையின் வருமானத்தை பெருக்க அதிக பணத்தை முதலீடு செய்ய
வேண்டி இருந்தது அரசிடம் அப் பணம் இல்லமையினால் தனியார் துறைகளை ஊக்குவிக்கும்
திட்டங்களை முன்வைப்பது அவரது முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
வருமான வரிகளான
மீன் வரி, மது வரி
மற்றும் காணி வரி என்பன நேர் வரிகளாக மாற்றப்பட்டன.
அதாவது வரி அறவிடும் உரிமையினை ஏலத்தில் விற்கப்பட்டது
இதற்கு பதிலாக படகுகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதன் மூலம் நேரடியாக அரசு வரி
அறவிட முடியும் என வகுத்தார்.
வரி அறவிடப்பட்ட முறைகள்.
மீன் வரி;
பிடிக்கப்படும் மீன்களின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக
செலுத்தப்பட்டது.
காணி வரி: விலைச்சலில் ஒரு பகுதி வரியாக செலுத்தப்பட்டது.
இக் காணி வரியினை நீக்கிவிட்ட அனைத்து நிலங்களுக்கும் சமவளவு வரி அறவிட பரிந்துரை
செய்தார் கோல்புறூக்.
சேமிப்பு வங்கி ஒன்றை ஆரம்பிக்குமாறு அரசுக்கு சிபாரிசு செய்தார் கோல்புறூக். என்னெனில் பெருந்தோட்ட துறையில் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது அவரின் நோக்கமாகும்.
பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தி
இதன் பின் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம்
கண்டது.
தனியார் முயற்சிகளை ஊக்குவிப்பது இவருடைய நோக்கமாக காணப்பட்டது ஆயினும் இலங்கையில் அவ்வாறான பாரிய பணம் படைத்தவர்க்ள் இல்லை என அறிந்த கோல்புறூக் வெளிநாட்டு முதலீட்டாளகளை இலங்கை வந்து வர்த்தக பயிர்களை பெரும் தோட்டங்களில் செய்து அதிக லாபம் பெற முடியும் என அறிந்திருந்தார்.
இதன் விளைவாக 19ஆம் நூற்றாண்டில் இலங்கயில் பெருந்தோட்ட
பயிர்ச்செய்கை துரித வளர்ச்சி கண்டது.
கோப்பி
ஒல்லாந்தர் காலத்தில் கரையோரத்தில் கறுவா பயிர்செய்கைக்கு முன்னுரிமை
கொடுக்கப்பட்டமையால் கோப்பி மிக சிறிய அளவிலே மேற்கொள்ளப்பட்டது.
கோப்பி பயிர்செய்கை விருத்தியில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்
1833 கோல்புறூக் சீர்திருத்தங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இலங்கை வந்து கோப்பி பயிர்ச்செய்கையில் முதலீடு செய்தமை
ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தமை
கோப்பி செய்கையில் அதிக லாபம் கிடைத்தமை
கோப்பித் தோட்ட தொழிலாளர்கள் கட்டாய இரஜகாரிய முறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை.
கோப்பி பயிர்செய்கையின் விருத்தி.
1837 – 1847 கோப்பி பயிர்ச்செய்கை மிக வேகமாக வளர்ச்சியடைந்தது.
1834ஆம் ஆண்டு கோப்பி எற்றுமதி 1844 ஆம் ஆண்டு ஐந்து மடங்கு அதிகரித்தது.
1848ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியும் கோப்பி செய்கையினை பாரிய அளவு பாதித்தது.
1848 கோப்பி தோட்டங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது
ஆனால் 1860 கோப்பி பயிருக்கு வெமீலியா வெல்டாக்ஸ் (Hemilia Vestatrix) எனும் இலை வெளிறல் நோயினால் கோப்பி முற்றாக வீழ்ச்சியடந்தது.
சிங்கோனா மற்றும் கொக்கோ
கோப்பி வீழ்ச்சியினை தொடர்ந்து சிலர் சிங்கோன
பயிர்ச்செய்கையில் ஈடுபட்னர்.
இது கோப்பிக்கான மாற்று பயிராக காணப்படவில்லை.
கோப்பியின் பின்னர் கொக்கோ பயிர்ச்செய்கைக்கு அரச அனுரசனை கிடைத்தது
ஆனால் கொக்கோ பயிருக்கு அதிக நிழல் தேவைப்பட்டது இதற்கு
அதிக செலவு ஏற்பட்டது.
இதுவும் மாத்தளை பகுதியில் மட்டுமே சிறந்த விளைச்சலை பெற்றுத்தந்தது.
கொக்கோ உச்ச வளர்ச்சிக் காலத்தில் 12000 ஏக்கர்
தாண்டவில்லை.
இதுவும் கோப்பிக்கான மாற்று பயிராக வெற்றியளிக்கவில்லை
தேயிலை
கோப்பி விலை உலக சந்தையில் கூடிக் குறைய இதற்கான மாற்றுப்
பயிர்களை மலையக மக்கள் முயற்சி செய்தனர்.
1967ஆம் ஆண்டு பெருந்தோட்ட உற்பத்தியாளர் சங்கம் சிலரை அசாமிற்கு அனுப்பி தேயிலை தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்தது.
இதற்கிடையில் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் லுல கந்துர
எனுமிடத்தில் சில ஏக்கர் பரப்பில் தோயிலயினை மேற்கொண்டார்.
1894ஆம் ஆண்டளவில் 400 000 ஏக்கர் பரப்பில் தேயிலை மேற்கொள்ளப்பட்டது.
உலர் வலயம் தவிர 6000 அடிக்கும் உயரமான அனைத்து இடங்களிலும்
தேயிலை பயிரிடக் கூடியதாக இருந்தது.
1930ஆம் ஆண்டளவில் 1200 தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டது.
தேயிலை விருத்திக்கான காரணங்கள்
சிறந்த விலை
அனைத்து இடங்களிலும் தேயிலை
பயிரிடக் கூடியதாக காணப்பட்டது.
நவீன இயந்திர வசதி
போக்குவரத்து அபிவிருத்தி
குறைந்த கூலிக்கு தொழிளார் வசதி
தென்னை இலங்கையின் பண்டைய காலம் முதல் வீட்டு தோட்டங்களில்
பயிரடப்பட்ட ஓர் பயிராகும்.
கோப்பி வீழ்ச்சியினை தொடர்ந்து தென்னை மீதும் கவனம்
செலுத்தப்பட்டது இதன் விளைவே தெங்கு பயிர்ச்செய்கையின் வளர்ச்சியாகும்.
ஐரோப்பியரை விட இலங்கையர் தெங்கு அதிகமாக பயிரிட்டனர்.
1880 ஆண்டளவில் தெங்கு தோட்ட உரிமையாளர்கள் 65 சதவீதாமானோர் இலங்கயராக இருந்தனர்.
1920ஆம் ஆண்டு வருமானத்தில் 27% தெங்கு மூலம் பெறப்பட்டது.
தெங்கு இலங்கையில் பரவலடைந்தபோது லுணுவில எனுமிடத்தில்
தெங்கு ஆராச்சி நிலையம் நிறுவப்பட்டது.
இறப்பர்
இலங்கயில் 1877ஆம் ஆண்டு இறப்பர் பயிரப்பட்டது ஆயினும் அக்
காலத்தில் உற்பத்தியாளர்கள் தேயிலை மீது கவனம் செலுத்தியமையால் இறப்பர் மீது கவனம்
செலுத்தவில்லை.
20ஆம்
நூற்றாண்டின் போது மோட்டார் வாகன கைத்தொழில் விருத்தியடைய உலக சந்தையில் இறப்பர்
விலை அதிகரித்தது.
1920ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தில் 30% இறப்பர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
பிற்காலத்தில் அகலவத்த டாட்டன் பீல்ட் எனுமிடத்தில் இறப்பர்
ஆராச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
இறப்பர் பயிர்செய்கையின் விருத்திக்கு வித்திட்ட காரணிகள்
பொருத்தமான இறப்பர் இனத்தை தெரிவுசெய்து
பயிரிட்டமை
தொழிநுட்பமான முறைகள்
தேயிலை விலையின் வீழ்ச்சி
சமூக மாற்றம்
பிரித்தானியர் இலங்கையில் ஆட்சி செய்த காலத்தில் இலங்கையின்
சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இச் சமூக மாற்றத்தினை பற்றிய சுருக்கமான விளக்கத்தினை இப்
பகுதியில் பார்ப்போம்.
மத்திய தர வகுப்பினர் தோற்றம் பெற்றது.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்
ஏற்பட்ட சமூக மாற்றமாக பழைய பிரபுக்கள் சமூக அந்தஸ்தினை இழப்பதும் புதிதாக மத்திய
தர வர்க்கத்தினர் தோற்றம் பெற்று அவர்கள் அனைத்திலும் செல்வாக்கு
செலுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கோல்புறூக் முதலாளித்துவ பொருளாதார முறைக்கு வித்திட்டார். இதனால் பணம் சம்பாதிக்கும் வழிகள் திறப்பட்டன.
பெருந்தோட்ட தொழில்கள்
சாராய உற்பத்தி மற்றும் விநயோகம்
சாராய குத்தகை உரிமை
கரீயம் அகழ்தல்
சில்லறை மற்றும் மொத்த வியாபாரம்
போக்குவரத்து சேவை வழங்கள்
தென்னந்தோட்ட உரிமைகள்
என பல வழிகள் மூலம் பணமீட்ட அனைவருக்கும்
வழியமைத்து கொடுத்தது கோல்புறூக் அவர்களின் திட்டம்.
இதன் மூலம் இக் காலத்தில்
சட்டத்தரணிகள்
வைத்தியர்கள்
பொறியியலாளர்கள்
நில
அளவையாளர்கள்
சிவில்
சேவையாளர்கள்
எழுதுவினைஞர்கள்
என
பலர் தோற்றம் பெற்றனர்.
இவர்கள் பலர் புதிய தொழில்
வாய்ப்புக்களுடன் உயர்வான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டனர்.
ஆங்கில கல்வியினை பெற்று அரச தொழில்களில் ஈடுபட்ட கல்வி கற்ற வகுப்பினருமே
தொழிளாலர் வகுப்பு தோற்றம்
பிரித்தானியர்
காலத்தில் இலங்கயில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மாற்றங்களால் தொழிலாளர்
வகுப்பொன்று தோற்றம் பெற்றது.
இப் பகுதிகளில் தொழிலாளர் வகுப்பு ஒன்று தோற்றம் பெற்றது.
பொருட்களை ஏற்றி இறக்குதல்
கை வண்டி
மூலம் பொருட்களை கொண்டு செல்லல்
பெருந்தெருக்கள்
மற்றும் புகையிரத வீதிகள் அமைத்தல் என பல வேலைகளில் நகர்ப்புர கூலி தொழிலாளிகள்
ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் பிரச்சனைகள்
குறந்த சம்பளம்
வேலை நேரம் வரையறுக்கப்படவில்லை
தொழிலாள காப்புறுதியோ நட்டைஈடு வழங்குவதோ
தொழிலாளர் நலன்புரி நடவெடிக்களோ இல்லை
இதனால் தொழிளாலர்கள் பல போராட்டங்கள் மூலம் தமது தேவைகளை
நிறைவேற்றிக் கொண்டனர்.
பல தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டது.
தொழில் துறைகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தி தமது
நிலையினைமேம்படுத்த முயற்சி செய்தனர்.
20ஆம் நூற்றாண்டில் 3ஆம் தசாப்தத்தில்
தொழிலாளர்கள் சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டனர்.
ஏ.ஈ குணசிங்க அவர்கள் நகர் புற தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி
தொழிற்சங்கத்தினை உருவாக்கிய முக்கிய தலைவர் ஆவார்.
1922 முதல் 1935 வரை சிறப்பாக செயற்படார்.
1922ஆம் ஆண்டு இவரால் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
கலாச்சார மாற்றம்
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றமாக
மேலைத்தேய கலாச்சர முறையின் தாக்கத்தினையே கொள்வோம்.
பலர் வெளிநாடுகளில் கல்வி கற்று நாடு திரும்பினர் இதன் போது அவர்களிடம் மேலை நாட்டு கலாச்சாரம் பரவியிருந்தது.
ஆடையணிகள், பழக்கவழக்கங்கள், வாழ்த்து வணக்கம் தெரிவிக்கும் முறைகள், கட்டட கலையம்சங்கள், உணவும் பாண வகைகள் என்பன இலங்கை கலாச்சாரத்துடன் கலந்து கொண்டது.
இவ்வாறு இலங்கை மக்களிடையே ஆங்கிலேயர் காலத்தில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டது.
பிரித்தானியர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவுகள்
பிரித்தானியர் இலங்கையினை 133 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இக்
காலப் பகுதியில் இலங்கையில் ஆங்கிலேயர் அவர்களின் நன்மை கருதியே செயற்பட்டனர்
என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற அனைத்து செல்வங்களும் இக்
காலத்தில் தாய்நாட்டிற்கு எடுத்து சென்றனர்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு பிரித்தானியரின் ஆட்சியில் சில
நன்மைகள் உண்டானது என்பது உண்மயாகும்.
சர்வதேச மொழியான ஆங்கிலம் மொழியறிவு இலங்கையில் பரவியது
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் துறை வளர்ச்சியடந்தது.
பாரளமண்ற ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
மேலை நாட்டு கலாச்சார பரவலின் விளைவாக உள்நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் என்பன சீரழிவுக்கு உட்பட்டது.
மதுப்பாவனை நாடுமுழுவதும் பரவியது.
காணி உரிமையற்ற மக்கள் கூட்டம் உருவாகியமை.
மரபுரீதியான தன்னிறைவு பொருளாதார முறை வீழ்ச்சியடந்து தேசியரீதியான அறிவும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டது.