ஆங்கிலேயர் காலத்தில் சமயம் மற்றும் தேசியரீதியாக ஏற்பட்ட மற்றங்களை சீர்செய்ய பலர் தோற்றம் பெற்றனர். பிரித்தானியர் இலங்கையினை (1796-1948/ 152 வருடங்கள்) ஆட்சி செய்த காலப்பகுதியினை இரண்டாக வகுத்து நோக்கலாம்.
1. 1850 – 1915 வரை = சமய/தேசிய மறுமலர்ச்சி காலம்
2. 1916 – 1948 வரை = அரசியல் போராட்டம் நிறைந்த காலம்
ஆங்கிலேயர் ஆட்சியில் கண்டி வீழ்ச்சியினை தொடர்ந்து இலங்கையின் தேசியத்தினை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1948 கலவரத்தின் பின்னர் இலங்கையின் தனித்துவத்தினை (சமயம்/தேசியம்) என்பவற்றை பாதுகாக்க பலர் முழுமுயற்சியுடன் ஈடுபட்டனர் இதுவே தேசிய மறுமலர்ச்சி எனப்பட்டது.
ஆங்கிலேயர் தமது (அங்கிலிகன்) மதத்தினை பரப்ப பல வழிகளை கடைப்பிடித்தனர். இதற்கென பல மிஷனரி அமைப்புக்கள் நாட்டின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு பல நடவெடிக்கைகளில் ஈடுபட்டனர்.ஐரோப்பியர் தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பரப்ப எழுத்து/ சொற்பொலிவு மற்றும் கல்வி போன்றவற்றை பயன்படுத்தினர்.
அரசாங்கமும் முழு ஆதரவினை வழங்கியது. மொழிப் பிரச்சனையினைத் தவிர அனைத்து வசதிகளும் கிட்டியது ஆங்கிலேயருக்கு.
மிஷனரி மத குருமார் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்று தேசிய மொழிகளில் தமது மதத்தினை பரப்பினர்.
பௌத்த மறுமலர்ச்சி
மிஷனரியின் செயற்பாடுகளுக்கு இல்ங்கயின் சுதேசிகள் (பௌத்த குருமார்) பல நடவெடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் இலங்கையின் பிரிவெனா கல்வி முறை மீண்டும் தோன்ற பல கல்விமான்கள் தோன்றியது மறுமலர்ச்சிக்கான சாதகமான சூழ்நிலையினை உருவாக்கியது.
அச்சகங்கள் நிறுவுதல்.
இலங்கையின் முதல் அச்சகம் = புலத்கம தம்மாலங்கார ஸ்ரீ சுமண திஸ்ஸ தேரர் 1862ல் காலியில் “லங்கோபகார” அச்சகத்தை நிறூவினார்.
இதனைத் தொடர்ந்து பல அச்சகங்கள்
நிறுவப்பட்டது.
இவற்றிம் மூலம் – பௌத்த நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன வெளியிடப்பட்டன.
சொற்பொலிவுகளிலும் பகிரங்க விவாதங்களிலும் ஈடுபட்டனர்.
கொட்டாஞ்சேனை தீபத்துராமையில் வசித்த “மீகொட்டுவ குணனந்த தேரர்” விவாதங்களில் சிறந்து விளங்கினார். இவருடைய அணியில் இடம் பெற்றவர்கள்
ஹிக்கடுவ சுமங்கள தேரர்
வஸ்கடுவ சுபுதி தேரர்
பொத்துவில இந்திர ஜோதி தேரர்
இரத்மலானை தம்மாலோக தேரர்
இவர்கள் நடாத்திய 5 பெரும்
விவாதங்கள் மிகப் பிரசித்தி பெற்றது.
இவை “ஐம்பெரும் விவாதங்கள்/
பஞ்ச மகா விவாதங்கள்” எனப்பட்டது.
1.
1865 பத்தேகம
2.
1865 வராகொட
3.
1866 உதன் விட
4.
1871 கம்பளை
5.
1873 பாண்ந்துறை
பாணந்துறை விவாதம் உலகப் புகழ் பெற்றது. ஹென்றி ஸ்டீல் ஒல்கோட்” அவர்கள் பௌத்த சமத்தினால் ஈர்க்கப்பட்டார்.
தொடர்ந்து இலங்கை வந்து பௌத்த சமயத்தை தழுவியதுடன் பௌத்த மறுமலர்ச்சிக்கு அளப்பரிய பணியினை ஆற்றினார்.
பௌத்த பாடசாலைகள் அமைக்கப்படல்.
1880ல் ”பௌத்த பிரம்ம ஞான சங்கம்” ஒன்று அமைக்கப்பட்டது.
இலங்கையின் பல இடங்களில் பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கொழும்பு ஆனந்த கல்லூரி |
மாத்தளை விஜய கல்லூரி |
கண்டி தர்மராஜ கல்லூரி |
கம்பளை ஜினராஜ வித்தியாலயம் |
காலி மஹிந்த கல்லூரி |
நாவலப்பிட்டி அநுருத்த வித்தியாலயம் |
ஒல்கொட் அவர்களின் முயற்சியால்
“வெசக் தினம்” விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்தது.
இக் காலத்திலே இலங்கையின் பௌத்த கொடி வடிவமைக்கப்பட்டது.
தேசப் பற்றை வளர்க்கும் இயக்கம்
நோக்கம்: மக்களுக்கு தேசிய
கலாச்சாரத்தினை கற்றுக் கொடுப்பதன் மூலம் தேசப்பற்றினை வளர்ப்பது.
அநாகரீக தர்மபால
பழமையான கலாசாரத்தின் முக்குயத்துவத்தினையும், பௌத்த கலாசாரத்தையும் விளக்கி புதிய சிந்தனைக் கருத்துக்களை முன்வைத்தார்.
பியதாஸ சிறிசேன
நாவல்கள் மூலமும், ”சிங்கள
ஜாதிய” எனும் பத்திரிகை மூலமும் ”சுதேச கலாச்சாரத்தை விட்டு மேற்கத்தேய கலாச்சாரத்திற்கு
மாறுவதனை கடுமையாக விமர்சித்தார்”
மது ஒழிப்பு இயக்கம்
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில்
மது பவனை அதிகரித்தது இது பல சமூக பிரச்சனைகளைக் கொண்டு வந்தது.
பல கல்விமான்கள் பல வழிமுறைகளைக் கையாண்டு மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர்.
அநாகரீக தர்மபால
ஜோன் த சில்வா
இந்து சமய மறுமலர்ச்சி
இந்து சமயம் மற்றும் காலச்சார மறுமலர்ச்சிக்காக தலைமைதாங்கி செயற்பட்டவர் “ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்”ஆவார்.
நாவலர் மிஷனரிப் பாடசாலையில்
கற்றார்.
மெதடிஸ் மத குரு ஒருவரின் கீழ்
பணியாற்றியவர் என்பதாலும் நல்ல அனுபவம் கொண்டவராக திகழ்ந்தார்.
அச்சகம் நிறுவுதல்.
சொற்பொழிவாற்றுதல்
என்பன மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டினர்.
பல தமிழ் பாடசாலைகளையும் அமைக்க முன்னோடியாக திகழ்ந்தார்.
அச்சகம்
வண்ணார் பன்னையில் முதல் அச்சகம் நிறுவப்பட்டது.
உதய பானு எனும் பத்திரிகையும் வெளியிடப்பட்டது.
இந்து மாணவர்களுக்கு 3 படிமுறைகளைக் கொண்ட பாட நூல்களை எழுதியது இவருடைய பணிகளில் முக்கியமானதாகும்.
1849ம் ஆண்டு வண்ணார் பண்ணையில்
சைவபிரகாச வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது.
சைவ பரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்டது.
இந்து கல்வி சபை மூலம் சைவப்
பாடசாலைகள் அமைக்கும் இயக்கம் வலுப்பெற்றது.
தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில
கல்வியினை வழங்க 1872ல் சைவ ஆங்கில வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் அது யாழ்ப்பாணா இந்துக்
கல்லூரியாக வளர்ச்சியடைந்தது.
நவலரின் பின் சேர் பொன்னம்பலம்
இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களும் பெரும் இடர்களுக்கு மத்தியில்
முன்னெடுத்தனர்.
இவர்கள் சிங்கள மக்களிடையேயும்
பிரசித்தி பெற்றனர்.
1915ல் இராணுவ சட்டம் மூலம்
ஆங்கிலேயர் பௌத்தர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது இவர்கள் பௌத்தர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அருணாச்சலம் அவர்கள் சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து இலங்கையினை மீட்க 1919ல் தேசிய சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டார்.
பௌத்த/ இந்து மத கலாச்சார வளர்ச்சி
போல் இஸ்லாமிய சமயமும் கலாச்சாரமும் வளர்ச்சி பெற்றது.
இதற்கு தலைமை தாங்கியவர் அறிஞர்
எம்.சி.எம்.சித்திலெப்பை அவர்கள் ஆவார்.
1883ல் எகிப்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட “ஓராபி பஷா” என்பவனும் பக்க துனையாக செயற்பட்டான்.
சித்திலெப்பை
முஸ்லீம் மக்கள் அரபி/ ஆங்கில
கல்வியினைப் கற்க ஊக்குவிப்பது இவரது நோக்கமாகும்.
1882ல் முஸ்லீம் நேசன் பத்திரிகை
ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு சாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
முஸ்லீம் கல்வி சபை தோற்றம் பெற்றது.
இவரின் நினைவாக கண்டி சித்திலெப்பை
வித்தியாலயம் விளங்குகின்றது.
இவரை தெடர்ந்து கொழும்பு சாஹிரா
கல்லுரியில் அதிபராக பணிபுரிந்த டி.பி ஜாயா அவர்கள் செயற்பட்டார்கள்.
முஸ்லீம் மாணவர்களுக்கு இலங்கையில்
பல பகுதிகளில் பாடசாலைகளை அமைக்க முன்னின்று உழைத்தார்.
இலங்கையின் முதலாவது அமைச்சரவையில்
இவரும் ஈடுபட்டார்.
இது போன்ற நடவெடிக்கையில் இலங்கையில்
காணப்பட்ட பல சுதேச கலாச்சார, சமய பண்புகள் பாதுகாக்கப்பட்டன.